தயவு செய்து மாணவர்களை வருத்தாதீர்கள்.. புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூற காரணம் என்ன?

Update: 2023-07-18 03:01 GMT

புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் மிகவும் விமர்சியாக பள்ளி குழந்தைகளுடன் கல்வி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இதில் கலந்து கொள்ளும் அரசு அதிகாரிகள் முதல் முதலமைச்சர் வரை மற்றும் கவர்னர் வரை அனைவருமே தங்களுடைய நேரத்தை ஒதுக்கி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் எதிர்பார்க்காத சூழ்நிலைகளில் இந்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்வதற்கு சற்று தாமதம் ஏற்படுவது வழக்கம்தான்.


அந்த வகையில் நேற்று முன்தினம் கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற மாணவர் தின விழா தொடங்க சற்று கால தாமதமானதால் மாணவர் மயங்கி விழுந்த செய்தியறிந்து வருத்தம் அடைந்ததாக புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கால தாமதத்திற்கு சில நடைமுறை சிக்கல்களே காரணம் என்று தெரிவித்தார். அதுமட்டுமில்லாத புதுச்சேரியில் இனிமேல் இத்தகைய அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் இது போன்ற அசவுகரியங்கள் நிகழாமல் இருக்க மாணவர்களை வெயிலில் நிறுத்தி வரவேற்பு அளிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார்.


மாணவர்களை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்கள் வரும் வரை வெயிலில் அல்லது அவர்களை துன்புறுத்தும் வகையில் நிற்கவைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார். நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றால் மட்டும் போதுமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News