வருமான வரி செலுத்துவோர் அதிகரிப்பு... புதுச்சேரிக்கு எத்தனாவது இடம் தெரியுமா?
புதுச்சேரி, 2022-23 நிதியாண்டின் மொத்த வரி வசூல் ரூ.1,24,414 கோடி அதில் நிகர வரி வசூல் ரூ.1,08,364 கோடி. தேசிய அளவில் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் நான்காம் இடத்தில் உள்ளது. நிகர வரி வசூலான ரூ.1,08,364 கோடியில், ரூ.60,464 கோடி TDS/TCS மூலமாக வசூலானது. இது நிகர வரி வசூலில் 56 சதவிகித பங்கு ஆகும். TDS வசூலைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 50% வசூல் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் TDS, அதைத் தொடர்ந்து தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் ஒப்பந்த கட்டணங்களுக்கான TDS ஆகும்.
2023-24 நிதியாண்டிற்கு, இம்மண்டலத்திற்கான வரி வசூல் இலக்கு ரூ.1,17,900 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இவ்விலக்கில் TDS/TCSக்கான இலக்கு ரூ.59,851 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. பல புதிய பரிவர்த்தனைகள், அதாவது பணம் திரும்பப் பெறுதல், வெளிநாட்டிற்குப் பணம் அனுப்புதல், சொகுசு கார்கள் வாங்குதல், ஆன்லைன் விளையாட்டு போன்றவையும் TDS/TCS வரம்பிற்குள் கொண்டுவரப் பட்டுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலமானது, TDS/TCS தொடர்பாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்கள் மற்றும் நடைமுறைகளை, சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு விளக்கும் விதமாக பலதரப்பட்ட சேவைகளை வழங்க முயற்சிக்கிறது. சமீபத்தில், நாட்டிலேயே முதல் முறையாக வருமான வரித்துறையின் வரலாற்றில் முதல் முயற்சியாக “TDS நண்பன்" என்ற பெயரில், பல்வேறு விதிகள், கட்டணங்கள், பணம் அனுப்புவதற்கான காலக்கெடு போன்ற TDS தொடர்பான கேள்விகளுக்கு பிரத்தியேகமாக தகவல்களை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு சுலபமாக பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு இடையே இடைமுகமாக 24 X 7 செயல்படும் நோக்கம் கொண்டது.
Input & Image courtesy: News