புதுச்சேரி: கல்வியின் தரத்தை மேம்படுத்த அமைச்சரின் தீவிர ஆலோசனைக் கூட்டம்..

Update: 2023-07-21 11:52 GMT

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, மாகி பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா ஆகியோர் கலந்துகொண்டனர். புதுச்சேரியில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தவறுகள் வெளியாகி இருக்கிறது.


அப்போது மாகி தொகுதியில் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்புவது, பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல அது கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அரசு பள்ளி மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் ஆனது அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.


கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு புதுச்சேரி அரசாங்கம் செய்த முதல் முக்கிய முயற்சியாக இந்த ஒரு நடவடிக்கை பார்க்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாது இனிவரும் காலங்களிலும் சிபிஎஸ்சி திட்டத்தை மற்ற அனைத்து அரசு பள்ளி வகுப்பினருக்கும் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. விரைவில் புதுச்சேரியில் அரசு பள்ளிகளின் தரம் மிக அதிக அளவில் உயர்ந்து மாணவர்களின் கல்வித் தரும் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News