புதுச்சேரி: இந்து பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள்... முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

Update: 2023-07-27 01:57 GMT

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்திபெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 5-வது வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறும். 2023 ஆம் ஆண்டிற்க்கான ஆடி தேர்த்திருவிழா ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சி 10-ந்தேதி நடக்கிறது. இந்த விழாவில் புதுவை, கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.


இந்த நிலையில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்து கூட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.


கூட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், மற்றும் மின்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், தீயணைப்புத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Input & image courtesy: News

Tags:    

Similar News