தமிழை வளர்த்ததே ஆன்மிகம் தான்.. புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று சிதம்பரம் நடராஜர் மற்றும் தில்லை காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சிறப்பாக சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் குறிப்பிடும் பொழுது, அனைத்து கோயில்களும் பாதுகாக்கப்பட வேண்டியது உண்மைதான். ஆன்மீகம் இல்லை என்றால் தமிழ் இல்லை, தமிழை வளர்ப்பது ஆன்மீகம் தான். ஆண்டாள் வளர்காத தமிழா? நாயன்மார்கள் வளர்காத தமிழா? தமிழகத்தில் தமிழை வளர்க்காதவர்கள் ஆன்மீகவாதிகள் என்பது போல தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். அந்த தோற்றம் மறைக்கப்பட வேண்டும்.
பிறகு மேலும் பேசிய அவர் மேல் வளையமா தேவி பகுதிகளில் உயிருக்கு சமமாக இருக்கும் பயிர்களை என்எல்சி அளித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டு இருந்தார். குறிப்பாக இந்த நிலங்களை ஏற்கனவே கையகப்படுத்தி விட்டதாக என்எல்சியும் அதில் பயிரிடக் கூடாது என்று விவசாயிகளிடம் ஏற்கனவே வலியுறுத்தியதாகவும் அமைச்சர்கள் கூறுகிறார்கள். நிலத்தை கையகப்படுத்திய பிறகு நிர்வாக ரீதியாக பத்து ஆண்டுகளாக இடைவெளியை ஏன் அனுமதித்தீர்கள் என்ற தற்போதைய கல்வி முன்வைக்கப்படுகிறது.
பயிர்கள் வளர்க்கப்பட்டு அறுவடை முடியும் வரை நிர்வாகம் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்து இருந்தார். இதில் எங்கே இடைவெளி ஏற்பட்டது என்று தெரியவில்லை. நிலத்தை கையகப்படுத்தியதால் விவசாயிகளிடம் முன்னதாகவே பயிர் செய்யக்கூடாது என்ற கூறியிருக்க வேண்டும். ஆனால் பயிரிட்ட பிறகு வளர்த்த பயிரை அழிக்க கூடாது என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்து என்றும் கூறியிருந்தார்.
Input & Image courtesy: News