பெண்களுக்கு பெஸ்ட் புதுச்சேரி தான்.. கவர்னர் தமிழிசை பெருமிதம்..

Update: 2023-08-02 02:20 GMT

புதுச்சேரி அரசு சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, குடிமை பொருள் வழங்கல் துறை சார்பில் முதல்-அமைச்சரின் 4 புதிய மக்கள் நலத்திட்டங்களின் தொடக்க விழா நேற்று கம்பன் கவியரங்கத்தில் சிறப்பாக தொடங்கியது. குறிப்பாக இந்த மக்கள் நலத்திட்ட விழாக்களில் முதல்-அமைச்சரின் விபத்து காப்பீடு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300, ரூ.150 மானியம் ஆகியவை அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு முதல்-அமைச்சரின் 4 புதிய மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்தார்கள். பிறகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பேசும் பொழுது, பெண்களுக்கான எந்த திட்டம் என்றாலும் புதுச்சேரியில் மிகச் சிறப்பாக, மற்ற மாநிலங்களை விட விரைவாக செயல்படுத்தப் படுகிறது என்பதை இந்த அரசு நிரூபித்துள்ளது. ஏனென்றால் மற்ற மாநிலங்களில் அறிவித்த திட்டங்கள் இன்னும் மக்களுக்கு சென்று சேரவில்லை. ஆனால் புதுச்சேரியில் பெண்களுக்கு அறிவித்த திட்டங்கள் உடனடியாக சென்று சேர்த்து இருக்கிறோம்.


மத்திய-மாநில அரசுகள் இணைந்தால் புதுச்சேரி வளர்ச்சி பெறும் என்பதற்கு 'புதுச்சேரி மாடல்' முன் உதாரணமாக இருக்கிறது. பிரதமர் எங்களுக்கு அறிகுறியாக கூறியது பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் நான் தற்போது அதிகாரிகளுக்கு கூறுகிறேன். ஃபாஸ்ட் புதுச்சேரியாக நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News