போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.. புதுவை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு..
புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் போதைப்பொருள் மற்றும் புகையிலை எதிர்ப்பு, நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குறிப்பாக தற்போது இளைய சமுதாயத்திடம் அதிகரித்து வரும் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் போதை பொருளை தடுப்பை ஊக்குவிக்கும் வகையிலும் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரி வளாகத்தில் ஊர்வலத்தை பாரதிதாசன் மகளிர் கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில், புகையிலை மற்றும் போதைப்பொருட் களினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலத்தை மேற்கொண்டு இருந்தார்கள்.
இந்த ஊர்வலம் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் நிறைவடைந்தது. இதில் மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், ஒருங்கிணைப்பாளர், கல்லூரியின் போதைப்பொருள் மற்றும் புகையிலை எதிர்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Input & Image courtesy: News