ஜனாதிபதி திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக வருகிற 7-ந்தேதி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். இதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் தற்போது தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிகாரிகள் மும்மரமாக ஈடுபடும் வருகிறார்கள். புதுச்சேரிக்கு தற்போது முதல் முறையாக ஜனாதிபதி அவர்கள் பதவியேற்று பிறகு வருகை தர இருக்கிறார். அதன் காரணமாக அவரை சிறப்பாக வரவேற்பதற்கு புதுச்சேரி அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரெட்டி தலைமையிலான போலீசார் புதுச்சேரி - கடலூர் எல்லையான முள்ளோடையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அதாவது புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் ஏதாவது மர்ம நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா? என்பது தொடர்பான விசாரணையும் நடைபெற்ற வருகிறது. ஆயுதங்கள் இருக்கிறதா? அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த வாகனங்களை நிறுத்தி சரியான ஆவணங்கள் இருக்கிறதா? என சோதனை செய்தனர்.
மேலும் காரில் ஏதேனும் ஆயுதங்கள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். அதுபோல புதுச்சேரி நகரின் உள் பகுதிகளிலும் சந்தேகப்படும்படி நபர்களின் நடமாட்டம் இருந்தால் அவர்களை உடன் நிலையாக விசாரிக்கும் வகையில் புதுச்சேரி போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News