புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி தீர்மானம்.. கவர்னர் தமிழிசை ஒப்புதல்..
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது அங்கு உள்ள மிகப்பெரிய கோரிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள மக்களில் இருந்து அரசியல்வாதிகள் அனைவரும் இந்த ஒரு கோரிக்கையை முன்வைத்து பல்வேறு தடவை முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்று கோரிக்கை அனைத்து கட்சிகளினாலும் தற்போது மும்மரமாக முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மாதம் புதுச்சேரி மார்ச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்த அரசு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மத்தியில் தற்போது மீண்டும் ஒரு புதிய கோரிக்கை எழுந்து இருக்கிறது.
அதாவது புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிய தீர்மானத்திற்கு துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இந்த நிலையில், மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
Input & Image courtesy: News