ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக திரவுபதி முர்மு நேற்று புதுச்சேரி சென்றார். மேலும் அவருக்கு அங்கு மிக முக்கிய வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் முதலாக புதுச்சேரிக்கு வருகை தரும் ஜனாதிபதி அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் சென்ற அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். அங்கு புற்றுநோய் பிரிவில் ரூ.17 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன கதிரியக்க கருவியை தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவமனைகளாகத்தில் உள்ள அப்துல் கலாம் கலை அரங்கத்திற்கு வந்து ஜனாதிபதி அவர்கள் காணொளி காட்சி வாயிலாக ஸ்ரீவில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை வசதிகளுடன் கொண்ட ஆயுஷ் ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் மற்றும் துணை கவர்னர் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தார்கள் மேலும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் கூறும் பொழுது, சுற்றுலா வளர்ச்சியுடன் மருத்துவ சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படும். இந்த தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த யூனியன் பிரதேசமான புதுச்சேரி தேசிய அளவிலும் உலக அளவிலும் தனித்துவமான முத்திரையை பதித்துள்ளது. புதுவை மக்கள் இந்த யூனியன் பிரதேசத்தை இன்னும் உயர்ந்த வளர்ச்சி மற்றும் சிறப்பிடத்துக்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.
Input & Image courtesy: News