பிரதமரின் பெரு முயற்சியினால் உலக நாடுகளில் யோகா தினம்.. புதுச்சேரி கவர்னர் தமிழிசை..
ஆரோவிலில் நடைபெற்ற ஆன்மிக கருத்தரங்கில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்று இருக்கிறார். அப்பொழுது அவர் கூறும் பொழுது, அரவிந்தர் மற்றும் அன்னையின் கனவு ஜனாதிபதியின் வருகையால் நினைவாகியுள்ளது. ஜனாதிபதி மிக கடுமையாக உழைத்து முன்னேறி ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். அரவிந்தர், அன்னை ஆகியோர் பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள் அது போல் தற்போது இந்தியா மாறிக் கொண்டு வருகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
நாம் தேசத்தின் விடுதலைக்காக போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கு ஆன்மிக விடுதலை தேவை என அரவிந்தர் கூறியிருந்தார். அதனால் அவர் புதுவையில் அடியெடுத்து வைத்தவுடன், நம் நாட்டின் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி வந்த போதிலும் யோகாவில் அவர் கவனம் செலுத்தினார். அது மட்டும் கிடையாது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னெடுப்பின் காரணமாக ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
யோகா இந்தியாவில் மட்டுமில்லை, 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அதில் 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இஸ்லாமிய நாடுகள். அதைபோல் அனைவரிடத்திலும் துணிவு இருக்க வேண்டும் என்று அன்னை விரும்பினார். அதுபோல நம்மிடம் துணிவு இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News