பிரதமர் மோடி ஆட்சியினால் வளர்ச்சி பெறும் புதுச்சேரி.. முதலமைச்சர் ரங்கசாமி உரை..

Update: 2023-08-18 07:05 GMT

புதுச்சேரி கடற்கரை சாலையில் கோலாகல ஏற்பாடு செய்யப் பட்டிருந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழா நடக்கும் கடற்கரை காந்தி திடலுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி காலை வருகை வந்தார். அவரை தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா வரவேற்று நேராக விழா மேடைக்கு அழைத்து சென்றார்.


அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும் போலீசார் அணிவகுப்பில் முதல் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தின நிகழ்ச்சி உரைகளை நிகழ்த்தினார். இது பற்றி இவர் கூறும் பொழுது, "நமது நாடு சுதந்திரம் பெற்றபோது பெரும் சவால்களும், பொறுப்புகளும் நம்மை சூழ்ந்திருந்தன.


கடந்த காலங்களில் நாம் வெற்றி வலது திரும்பி பார்க்கும் பொழுது பல்வேறு தியாகங்கள் செய்த தியாகங்கள் நம் கண் முன் வந்து நிற்கிறது. மேலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் தற்போது வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக என் மண் என் தேசம் என்று நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார். பிரதமர் மோடியின் ஆசியோடு, புதுவை மாநிலத்தின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நமது விவசாய நிலப்பரப்பு குறைந்து வருவதை கருத்தில்கொண்டும், தண்ணீர் தேவைகளை குறைத்து பயன்படுத்தவும் பசுந்தீவனத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கவும் நவீன மண் இல்லா பயிரிடும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News