புதுச்சேரி: கல்லூரி மாணவர்களுக்கு சைபர் பாடத்திட்டம் அறிமுகம்.. கவர்னர் அறிவிப்பு..

Update: 2023-08-19 06:19 GMT

புதுச்சேரியில் நேற்று கவர்னர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுத்து மற்றும் மாதிரி கிராமங்களை விரிவு படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு புதுச்சேரி கவர்னர் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழில்நுட்பத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சித்துறைச் செயலர், மாவட்ட கலெக்டர் மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய புதுச்சேரி கவர்னர் இதுபற்றி கூறும் பொழுது, புதுச்சேரியில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்கில்டா மூலம் 4,000 தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பிற கல்லூரியை சேர்ந்த 15000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு இருக்கிறது. தொழில் கல்வி குறித்த பல்வேறு அம்சங்களும் தற்போது இந்த பாடத்திட்டத்தை இணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.


இளநிலை கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது. இது மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் அதற்கான திட்டம் வகுக்க வேண்டும் என்று கவர்னர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News