புதுச்சேரி: விநாயகர் சதுர்த்திக்கு ஜோராக தயாராகும் பிரம்மாண்ட சிலைகள்..
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா என்பது பிரசித்தி பெற்றது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர்காக பக்தர்கள் செலவு செய்து வழிபாடு செய்வார்கள். பெரிய அளவிலான விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் தயார் செய்யப்பட்டு பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் வருகிற செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை செய்வதற்காக கைவினை கலைஞர்கள் பல்வேறு பகுதிகளில் சிறப்பான வேலைகளை செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் இருப்பதன் காரணமாக இப்போது இருந்து சில செய்வதற்கு கலைஞர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
புதுவையிலும் விநாயகர் சிலை செய்வதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் மற்றும் நிரவியில் பல்வேறு இடங்களில் ராஜஸ்தான் கலைஞர்கள் முகாமிட்டு விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர். பல்வேறு வடிவில் விநாயகர் சிலைகளை செய்கிறார்கள். நவரச நாயகர் மற்றும் பல்வேறு முகபாவணங்கள் தோற்றங்கள் அபிநயங்கள் அபதாரங்கள் போன்ற விசேஷமான வடிவங்களிலும் விநாயகர் சிலை செய்யப்படுகிறது. இந்த வருடம் மாசு இல்லாத விநாயகர் சிலையை செய்வதற்காக பல்வேறு பொருட்களையும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
காகித கூழ், கிழங்கு மாவு உள்ளிட்ட இயற்கையான பொருட்களை கொண்டும், தேங்காய்நார், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ஆகியவற்றை மூலப் பொருளாக பயன்படுத்தி மக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கும் விளைவிக்காத நோக்கத்தில் இத்தகைய சிலைகள் செய்யப்படுகிறது. வாட்டர் கலர் வர்ணம் பூசப்படுவதால் சிலைகளை கரைக்கும் போது எளிதில் கரையும் தன்மை கொண்டுள்ளதோடு, மாசு ஏற்படா வண்ணம் இவை தயாரிக்கப்பட்டு உள்ளன.
Input & Image courtesy: News