புதுச்சேரி வில்லியனூரில் புதிய ஆயுஷ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 3 மாதங்களுக்குள் இதை திறக்க முயற்சிகள் விரைவுப்படுத்தப் பட்டுள்ளன. புதுச்சேரியில் மதுக்க அரசின் அறிவுறுத்தலின் பெயரில் ஆயுஷ் மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது கடந்த நான்கு ஆண்டுகளாக கொரோனா சமயத்தில் இதன் கட்டுமான பணி தொய்வு அடைந்தது. தற்போது இந்த பணி தற்போது மும்முறமாக நடந்து வருகிறது. விரைவில் மருத்துவமனை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் பணி புரிவதற்காக பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ள சூழலில், தேவையான மருத்துவ சாதனங்கள் வாங்கவும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். மத்திய ஆயுஷ் அமைச்சகம் பொதுமக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல், உணவு மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்துடன் கூடிய சமூக கட்டமைப்பை உருவாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.
இதன் ஒரு முக்கிய அங்கமாக சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா ஆகியவற்றை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் ஆயுஷ் மருத்துவமனைகளை உருவாக்கி வருகிறது. மத்திய அரசின் தீவிர முயற்சிகளின் பெயரில் புதுச்சேரியில் இந்த மருத்துவமனை விரைவில் அமைகிறது.
Input & image courtesy: News