புதுச்சேரி: பத்து ரூபாய்க்கு உணவு விற்பனை நிலையம்... தொடங்கி வைத்த முதலமைச்சர்...
புதுச்சேரியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு உன்னதமான உணவகம் கதிர்காமம் பகுதியில் BSB அன்னை அறக்கட்டளை சார்பில் புதிதாக அமைக்கப் பட்டுள்ளது. இந்த உணவகத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஏழை எளிய மக்களுக்கு இவர்கள் உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக பத்து ரூபாய்க்கு உணவு விற்பனை செய்ய இருக்கிறார்கள். பத்து ரூபாய்க்கு உணவு விற்பனை செய்யப்படும் புதிய உணவகத்தினை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த பாராட்டுகளையும் தற்போது பெற்று இருக்கிறது.
உணவகத்தின் திறப்பு விழா நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த திறப்பு விழாவின் போது சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய மக்கள் அறுசுவை உணவுடன் கூடிய விருந்தை சுவைத்தார்கள். நேற்று திறப்பு விழா என்பதால் முழு உணவும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த உணவகத்தில் காரக்குழம்பு, சாம்பார், ரசம், மோர், மற்றும் மூன்று வகையான கூட்டு பொரியல் அப்பளம் உள்ளிட்ட அளவில்லா அறுசுவை உணவு 30 ரூபாய்க்கும் , தக்காளி, லெமன், புளி, சாம்பார், கருவேப்பிலை, புதினா, போன்ற சாப்பாடுகள் பத்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் சிவப்பிரகசம் இந்த முன் முயற்சியை பற்றி கூறும் பொழுது புதுச்சேரியை பொருத்தவரையில் அதிகமான ஏழை எளிய ஆதரவற்ற மக்கள் வாழ்கிறார்கள் எனவே அவர்கள் ஒருவேளை சாப்பாடு ஆவது குறைந்த விலையில் சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்து 10 ரூபாய்க்கு தரமான விலையில் உணவுகளை வழங்குகிறோம் அதற்கான முயற்சியை தான் தற்போது எடுத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News