ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நல்லது தான்.. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி..

Update: 2023-09-08 03:27 GMT

இந்தியாவில் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் தற்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். பொது அரசு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார். புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்க அரசு முடிவு எடுத்து இருக்கிறது. பால், ரொட்டி, பழம் உள்ளிட்ட சத்தான உணவை வழங்கவிருக்கிறோம். குழந்தைகளுக்கு சத்துகள் கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்துதான் முன்பு வழங்கிவந்தோம். அது மீண்டும் தொடரும்.


பின்னர் செய்தியாளர்கள் கேள்வி ஒன்றில் தற்போது இந்தியாவை பாரத் என்று அழைக்கிறார்கள் அதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் பதில் கூறும் பொழுது, இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றுவதை வரவேற்கிறோம். பாரத நாடு பழம்பெரும் நாடு என்பதால் வரவேற்கிறேன். மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் ஏற்கெனவே நடந்திருக்கிறது. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்திருக்கிறது. அந்த முறையில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. அது வரவேற்கத்தக்கது" என்றார்.


மேலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களிடம் தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் புதிய நிதி அவர்கள் சனாதன தர்மத்தை பற்றி கேள்வி இருக்கிறார். அது குறித்து தங்களுடைய கருத்து என்ன என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் தரும் வகையில் முதலமைச்சர் தன்னுடைய பதிலில் பதிவு செய்திருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News