குடியரசுத்தலைவர் ஆட்சியில் உள்ள அனைத்தும் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் - துணைநிலை ஆளுநர் தமிழிசை உறுதி!
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இதைனையடுத்து நிலுவையில் உள்ள மக்கள் நலத்திட்டங்களை செபடுத்துவது தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சட்டப்பேரவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சரவை கூட்டம் நடைபெறும் அறையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் அஸ்வனி முமார், ஆளுநரின் ஆலோசகர் சந்திரமவுலி, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் ஆகியோருடம் ஆலோசனை நடத்தினார்.
சுமார் 1 மணி நேரத்திகும் மேலாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆலோசனை குறித்து தகவல் தெரிவித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றதா என்று ஆலோசித்தோம்.
புதுச்சேரியில் விமான நிலையை விரிவாக்கம், காவிரி தண்ணீர் பெறுவது, மணல் விவகாரம், காசநோய் தொழுநோயாளிகளுக்கான சிகிச்சை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பிரதமருக்கு புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் தடுப்பூசி மருந்து செலுத்தியது பெருமை படக்கூடிய விஷயம் ஆகவே அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்தால் அதிலிருந்து காத்துக்கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் மேலும் குடியரசு தலைவர் ஆட்சியில் உள்ள நடைமுறைகள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றும் அதன்படி புதுச்சேரிக்கான நிதி மேலாண்மை நன்றாக செயல்படும்.