அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சாப்பிட்டு ஆய்வு செய்தார் துணைநிலை ஆளுநர் தமிழிசை!
புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதால் நேற்றைய தினம் அரசு அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் சட்டமன்றத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று கிராம பகுதியான கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்ன்றிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தினை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பள்ளியின் மாணவர்கள் வருகை குறித்து ஆசியரிர்களிடம் கேட்டறிந்த தமிழிசை பள்ளியின் உணவு கூடத்திற்கு சென்று அங்கு இருப்பில் இருந்த உணவு பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து உணவு கூடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு அங்கிருந்த ஊழியர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.