புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற பரபரப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது பா.ஜ.க.!

Update: 2021-03-04 01:45 GMT

Gவரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற, மத்திய அரசாங்கத்தின் தலைவர்களால் பெரியளவிலான பிரச்சாரத்தை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. முப்பது பேர் கொண்ட சட்டசபை ஏப்ரல் 6 இல் நடக்கவுள்ள நிலையில், யூனியன் பிரதேசத்தில் 10 உயர்மட்ட பிரச்சாரத்தை பா.ஜ.க களமிறக்கவுள்ளதாகப் புதுச்சேரியின் கட்சியின் பொறுப்பாளர் நிர்மல குமார் சுரனா தெரிவித்தார்.


அந்த பிரச்சாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் J P நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மட்டற்றும் ஸ்ம்ரிதி இரானி ஆகியோரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி மற்றும் ஷா முன்னரே சிறிய யூனியன் பிரதேசத்தில் கட்சியின் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தனர்.

அகில இந்திய NR காங்கிரஸ்(AINRC) மற்றும் AIADMK உடன் தேர்தலுக்கான இடப்பகிர்வு குறித்து விவாதம் நடைபெற்று வருகின்றது, மேலும் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கர்நாடகாவின் பா.ஜ.க துணைத் தலைவர் சுரனா தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று உடல்நல காரணங்களால் புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் V P சிவக்கொழுந்து விலகிய அவர், தற்போது பா.ஜ.க வுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் கட்சியில் இணையவுள்ளதாகவும் சுரனா தெரிவித்தார்.




 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவக்கொழுந்து சகோதரர் V P ராமலிங்கம் காரைக்காலில் பிரச்சாரத்தின் போது அமீத் ஷா முன்னிலையில் பா.ஜ.க வில் இணைந்தார். காங்கிரஸ் MLA க்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து V நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் பிப்ரவரி 22 இல் இழந்ததைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரி ஜனாதிபதி ஆட்சியின் கீழ் உள்ளது.

Similar News