தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் - தமிழிசை செளந்தரராஜன்!
புதுச்சேரி மாநிலத்தில் முன்கள பணியாளர்கள் 12941 நபர்களும், பொதுமக்கள் 945 நபர்களும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டர் மேலும் குறைந்த அளவிலான பொதுமக்கள் தடுப்பூசி சொலுத்தும் நிலையில் அதிகரிக்கும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகரிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்கள், சந்திரமொளலி, மகேஸ்வரி, தலைமை செயலர் அஸ்வனி குமார், டிஜிபி கிருஷ்னையா, சுகாதாரத்துறை செயலர், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை சில மாநிலங்களில் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்கள் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்,
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் புதுச்சேரி மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினார்.