புதுச்சேரி: இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் புதிய அலுவலக பொறுப்பாளர்கள் தேர்வு.!

Update: 2021-03-06 01:45 GMT

புதுச்சேரி மாநிலத்தின் 2021-22 ஆண்டிற்கான இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின்(CII) தலைவர் மற்றும் துணைத் தலைவராக பொக்லைன் ஹைட்ராலிக்ஸ் Pvt Ltd நிர்வாக இயக்குநர் K விஜய் மற்றும் தி பிளேவர்ஸ் இந்தியாவின் இயக்குநர் S சுரேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.




2020-21 காலகட்டத்தில் விஜய் உறுப்பினர் குழுவில் பணியாற்றினார். திருச்சி நேஷனல் இன்ஸ்டிடுட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் என்ஜினீயர் பட்டப்படிப்பை முடித்த விஜய், பிர்லா இன்ஸ்டிடுட் ஆப் டெக்னாலஜியில் முதுகலை படைப்பை முடித்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்பையும் முடித்துள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ள சுரேந்தர், டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் M Phil படிப்பை முடித்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச மக்கள் தொகை குறித்த சுமார் 40 ஆய்வுக்கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். 1993-1998 வரை மும்பையில் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.




CII வருடாந்திர கூட்டத்தின் போது புதிய அலுவலக பொருட்பாளர்கள் பொறுப்பேற்றனர் என்று புதுச்சேரி மாநில அலுவலக தலைவர் B ஸ்ரீநிவாஸ் சதீஷ் தெரிவித்தார். கொரோனா தொற்றுநோயின் காலகட்டத்திற்குப் பிறகு வணிக யுக்திகள் மற்றும் அதன் செழிப்பு குறித்து கூட்டம் நடைபெற்றது. குழுவில் இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கடந்து செல்வது குறித்துமட்டுல்லாமல் அதன் பிறகு எடுக்க வேண்டிய முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

Similar News