புதுச்சேரி முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடிக்குப் பரிசு வழங்கி ஜனாதிபதி கெளரவம்.!

Update: 2021-03-09 04:21 GMT

திங்கட்கிழமை அன்று புதுச்சேரியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி அவர்களுக்கு யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சேவை புரிந்ததைப் பாராட்டி இந்தியக் குடியரசு சின்னம் அலங்கரிக்கப்பட்ட மடல் மாற்றும் கடிதத்தையும் ராஷ்ட்ரபதி பவனில் வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந் வழங்கினார்.



 "புதுச்சேரியில் உயர்ந்த பதவியான லெப்டினன்ட் கவர்னராக பதவி வகித்தீர்கள். நீங்கள் செய்த அனைத்து அரசியல் கடைமைகளால் அனைவரிடமிருந்து பாராட்டுகளையும் மற்றும் மரியாதையும் பெற்றுள்ளீர்கள். மேலும் நீங்கள் உங்கள் பதவிக்காலத்தில் இருந்த போது நீங்கள் செய்துள்ள அனைத்து பங்களிப்புகளைப் புதுச்சேரி மக்களின் நலனில் சார்ந்து உள்ளது," என்று ஜனாதிபதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் புதுச்சேரியில் லெப்டினன்ட் கவர்னராக ஒரு பொது ஊழியராக பணியாற்றியது அனைவர்க்கும் பயனளித்துள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.


 "உங்கள் சாதனை, பங்களிப்பு, நடத்தை மற்றும் அணுகுமுறை நாட்டில் உள்ள பல மக்களை ஊக்குவித்துள்ளது. நீங்கள் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையினை பெற மனதார பிரார்த்தனை செய்கிறேன். மேலும் மனதில் முழு மகிழ்ச்சியுடன் இந்தியக் குடியரசு சின்னம் பொருந்திய ஒரு பரிசினை உங்களுக்கு வழங்குகிறேன்," என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

புதுச்சேரியில் பிப்ரவரி 22 இல் முன்னாள் முதலமைச்சர் நாராயண ஸ்வாமி தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி தற்போது ஜனாதிபதி கீழ் இயங்கி வருகின்றது. மேலும் புது லெப்டினன்ட் கவர்னராக தமிழிசை சௌந்தர ராஜன் பொறுப்பேற்றார்.

Similar News