புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் - ரங்கசாமி நம்பிக்கை!

Update: 2021-03-09 12:10 GMT

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக, என்.ஆர்.கங்கிரஸ், அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிக்ள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனையடுத்து தனியார் விடுதியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜக மற்றும் அதிமுகவிற்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, பாஜக சார்பில் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் சாமிநாதனும், அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர் மற்றும் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

கூட்டணி அமைத்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தேசிய ஜனநாயாக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்றதாக தெரிவித்தார். மேலும் பாமக கூட்டணியில் உள்ளதாக தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்.ஆர்.ரங்கசாமி தலைமை ஏற்பார் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து என்ற கேள்விக்கு தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்வர்கள் எனவும் தெரிவித்தார்.

Similar News