புதுச்சேரி: தடைகளை உடைத்து நலத்திட்டங்களைப் புரிந்துவரும் தமிழிசை சௌந்தரராஜன்!

Update: 2021-03-11 08:07 GMT

கடந்த நான்கு ஆண்டுகளாகப் புதுச்சேரி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு வந்தது. தற்போது சம்பளம் இழுபறி போன்ற அனைத்து நலத்திட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகின்றன. புது புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் கிரண் பேடி அவர்களால் பாதிக்கப்பட்டவர்களை தற்போது சரிசெய்து வருகிறார்.



சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக, 33 பள்ளி ஊழியர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க அனுமதியளித்துள்ளார். மேலும் இந்த முடிவின் மூலம் 800 ஊழியர்கள் மற்றும் 300 ஓய்வுபெற்ற ஊழியர்களும் 30 கோடி நிதி ஓதிக்கீட்டு மூலம் பயனடைவர். மேலும் முன்னாள் முதல்வர் V நாராயண ஸ்வாமி மற்றும் கிரண் பேடி அவர்களுக்கும் இருந்து வந்த பிரச்சனையால் தொகையை வழங்க அனுமதி பெறவில்லை.

இதற்குப் பிரச்சினையைக் குறித்து ஆராய அவர் ஒரு குழுவை நியமித்தார் அது 14 மாதங்கள் கடந்தது. இந்த மாதங்களில் ஊழியர்களும் மற்றும் ஓய்வூதியர்களும் சம்பளம் பெறாமல் தவித்தனர். தற்போது தமிழிசை பழைய GIA முறையின் படி 1-10 வகுப்பு ஊழியர்களுக்கு 95 சதவீத சம்பளத்தை வழங்க அனுமதியளித்துள்ளார். MCC திரும்பப்பெற்றபின்பு குழுவின் அறிக்கை பரிசீலிக்க வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மக்கள் கடற்கரைச் சாலையின் மோசமான நிலைமையில் கடினங்களைச் சந்தித்தனர். இதன் நிலைமை நிவாரி புயல் போன்றவற்றால் மிகவும் மோசமடைந்தது. புதுச்சேரியின் அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு கிரண் பேடி ஒப்புதல் அளிக்காததால் அதனையும் சரி செய்ய முடியவில்லை. அரசாங்கம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 80.40 கோடி மதிப்புள்ள சாலை திட்டங்களுக்குத் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.



மேலும் கொரோனா காலங்களில் அத்துமீறிச் செயல்பட்ட 15 மதுபான கடைகளின் உரிமங்களையும் அவர் ரத்து செய்தார். முதல் தமிழ் பேசும் லெப்டினன்ட் கவர்னர் என்பதால் மக்களின் குறைகளைக் காணச் சாதகமாக உள்ளது. மேலும் அவர் மெதுவாக மக்களிடம் நெருங்கிப் பழகுவதையும் காண முடிந்தது. சமீபத்தில் உள்ளூர் வாசிகளுடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டு அவர்களின் கடினங்களைக் கேட்டறிந்தார்.

சமீபத்தில் காங்கிரஸ் விடுத்து பா.ஜ.க வில் இணைந்த A நமச்சிவாயம் பா.ஜ.க வின் துணையின்றி எந்த கட்சிகளும் யூனியன் பிரதேசத்தில் அரசாங்கத்தை அமைக்க முடியாது. புதுச்சேரியில் அரசாங்கத்தை அமைக்க NDA மிகவும் கடின உழைப்புடன் செயல்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.

Similar News