புதுச்சேரி: காங்கிரஸ் தேர்தல் கூட்டத்தில் தலைவர்களுக்கு இடையே மோதல்!

Update: 2021-03-14 12:31 GMT

ஏப்ரல் 6 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பரபரப்புடன் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகத் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கட்சி கூட்டத்தையும் நடத்திவருகின்றது.

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணியான காங்கிரஸ் மற்றும் தி.மு.க இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறியில் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது கட்சிக் கூட்டணிக்குள்ளேயே சலசலப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அன்று காங்கிரஸ் தேர்தல் கூட்டத்தின் போது கட்சித் தலைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


இந்த கூட்டமானது யூனியன் பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளரைத் தீர்மானிப்பது குறித்து நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் V நாராயணஸ்வாமி அவர்களும் கலந்து கொண்டார். மோதல் முரட்டுத்தனமாகச் சென்றதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையகத்துக்கு வெளியே கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.


இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகின்றது. மேலும் அந்த வீடியோவில் கட்சித் தலைவர்கள் உட்பட அந்த மோதலில் அடிதடியில் ஈடுபடுவதைக் காணமுடிந்தது. புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 இல் நடைபெறத் திட்டமிட்டுள்ளது. மேலும் அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2 இல் நடைபெறவுள்ளது.


இந்த மோதல் சம்பவத்தில் ஒரு சுவாரஸ்யமாக வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியாகப் போட்டியிட உள்ளனர். மேலும் 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் மற்றும் திமுக 13 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.

Similar News