புதுச்சேரி: பள்ளிகளைத் தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை பரிந்துத்துறை!

Update: 2021-03-19 06:25 GMT

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக வியாழக்கிழமை சுகாதாரத்துறை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த கூட்டத்தில் தற்காலிகமாகப் பள்ளிகளை மூடவும் மற்றும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.


மேலும் லெப்டினென்ட் கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் தலைமையில் தடுப்பூசி குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில், இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் மற்றும் தொற்றுநோய் பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மக்களிடம் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்ய "மாஸ்க் புதுச்சேரி" என்ற இயக்கத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

சுகாதாரத் துறையின் இயக்குநர் S மோகன் குமார் வெளியிட்ட அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளைத் தற்காலிகமாக மூட கவர்னரிடம் பரிந்துரை செய்ததுடன், ஆன்டிஜென் சோதனையை 70:30 என்ற விகிதத்தில் அதிகரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 216 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 1 நிலவரப்படி யூனியன் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 177 ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் முன்வரிசை தொழிலாளர்களின் பட்டியலில் இணைக்கவும் மற்றும் மையத்தின் அறிவுரைப்படி தொற்றுநோய்க்கு எதிராகத் தடுப்பூசி போடவும் முடிவெடுக்கப்பட்டது.


கட்சி கூட்டங்கள் அனைத்தும் சுகாதாரத் துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும் மற்றும் குறிப்பாக முகக்கவசம் அணிவது குறித்தும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Similar News