சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கா - உண்மை என்ன ?

Update: 2021-03-20 06:06 GMT

தற்போது மீண்டும் கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருவதால், முன்னர் வெளிவந்த செய்திகள் மீண்டும் தவறாக தற்போது பரப்பப்பட்டு வருகின்றது. அதே போன்று ஒரு செய்தியாக, வார இறுதி நாட்கள் முழுவதுமாக ஊரடங்கை ஹரியானா அரசாங்கம் பிறப்பித்துள்ளதாக ஒரு செய்தி வைரலாக பரவப்பட்டு வருகின்றது.




 மேலும் அந்த செய்தியில் கடந்த ஆண்டு செய்தி சேனலில் வெளியிடப்பட்ட செய்தியின் புகைப்படமும் காணப்பட்டது. ஆனால் இந்த செய்தி தற்போது தெரிவிக்கப்பட்டது இல்லை மற்றும் கடந்த ஆண்டு வெளிவந்த செய்தியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த போலி செய்தியானது பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர் போன்ற செய்திகளிலும் பரப்பப்பட்டுள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவானது ஆகஸ்ட் மாதம் ஹரியானா அரசாங்கம் பிறப்பித்த உத்தரவாகும். இந்த வைரல் செய்தியைத் தொடர்ந்து மக்கள் அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பத்தொடங்கினர்.



மாநில அமைச்சர் அனில் விஜி, ஆகஸ்ட் 20 2020 இல் தனது ட்விட்டில், "அனைத்து வாரங்களிலும் இறுதி நாட்களில் கடைகளை மற்றும் அலுவலகங்களை மூடவும் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது," என்று குறிப்பிட்டிருந்தார்.




 ஆனால் தற்போது அந்த செய்தி தவறாகப் பரப்பப்பட்டு வருகின்றது. ஆனால் ஹரியானா அரசாங்கம் அதுபோன்ற ஒரு செய்தியைத் தெரிவிக்கவில்லை. எனவே தற்போது வைரலாகி வரும் செய்தியானது தவறானது ஆகும்.

Similar News