புதுச்சேரி: தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தயாராகும் வாக்குச் சாவடிகள்.!

Update: 2021-04-05 04:47 GMT

ஏப்ரல் 6 (நாளை) நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து வாக்குச் சாவடிகளைப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




 ECI யின் அறிக்கைப் படி, ஒரு வாக்குச் சாவடிக்கு அனுமதிக்கப்படும் வாக்காளர்களின் எண்ணிக்கை 1000 ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இருந்து கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்கப்பட்டு வருகின்றது.

வாக்காளர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முகக்கவசம் அணிவது அவசியம். மேலும் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, வாக்களிப்பதற்கு முன்பு ஒரு கையுறையும் வழங்கப்படவுள்ளது. மேலும் வாக்குச் சாவடிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதுகாப்பு பொருட்களைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் சாவடியை கண்டுபிடிக்க உதவ அவர்களுக்கு BLO கீழ் வாக்காளர் உதவி மையங்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் சாவடிகளில் ஒரு ஹாலுக்கு ஏழு என ECI வழிகாட்டுயாதலின் படி குறைக்கப்பட்டுள்ளது.




 மகளிர் பாலிடெச்னிக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெச்னிக் கல்லூரி, தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்டவை புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையங்களாக உள்ளன. இது தவிரக் காரைக்காலில் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மஹேவில் ஜவஹர்லால் நேரு GHSS மற்றும் யாணம் தொகுதியில் மினி சிவில் நிலையம் உள்ளிட்டவை உள்ளன.

Similar News