புதுச்சேரி: கொரனா காலத்தில் மதுபானங்களின் மீது விதித்திருந்த சிறப்பு வரி ரத்து.!

Update: 2021-04-09 01:30 GMT

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஏப்ரல் 8 முதல் மதுபானங்கள் மீதான சிறப்புக் கலால் வரியை நீட்டிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையைத் துணை ஆணையர் T சுதாகர் ஏப்ரல் 7 இல் வெளியிட்டார்.



 இந்த நடவடிக்கையை அடுத்து புதுச்சேரியில் மதுபானங்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக நிதியை ஈடுகட்ட நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் முதல் யூனியன் பிரதேசத்தில் விற்கப்படும் மதுபான பொருட்களுக்கு 25 சதவீதம் சிறப்புக் கலால் வரியை விதித்தது. இந்த வரியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

"இன்று ஏப்ரல் 8 2021 முதல், சிறப்புக் கலால் வரி விதிக்கப்படுவதற்கு முன்பு இருந்த விலை மீண்டும் கொண்டுவரப்படுகின்றது," என்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் லெப்டினென்ட் கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்திருந்தார்.



இந்த ஒப்புதலானது கலால் சிறப்பு வரியை அகற்றக் கலால் துறை அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் புதுச்சேரி-தமிழ்நாடு எல்லையில் உள்ள மதுபான விற்பனை கடைகள், குறிப்பாக மதுபானங்களை விற்கும் சில்லறை விற்பனையாளர்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் கொரோனா தொற்றுக்கான விதிமுறைகளைப் பின்பற்றவும் அவர் கேட்டுக்கொண்டார்.


source: https://timesofindia.indiatimes.com/city/puducherry/puducherry-liquor-prices-come-down/articleshow/81966419.cms

Similar News