புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகக்கவசமும், 10 ரூபாய்க்கு சானிடைஸிரும் விற்பனை!

Update: 2021-04-23 01:00 GMT

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஒரு முயற்சியாக, மக்களுக்கு மலிவு விலையில் முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் வழங்கும் நோக்கில், நிர்வாகம் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. அது ஒரு ரூபாய்க்கு முகக்கவசமும் மற்றும் 10 ரூபாய்க்கு 50 மில்லி சானிடைஸிரும் பொன்லைட் பால் விற்பனை நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதற்கான நிகழ்ச்சியை ராஜ் நிவாஸில் வைத்து தமிழிசை சௌந்தர ராஜன் தொடங்கி வைத்தார். "மருந்துகள், பரிசோதனைகள், படுக்கை வசதிகளைத் தேவையான அளவிற்கு ஏற்பாடு செய்து வந்தாலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான எளிய விதிமுறையான முகக்கவசம் அணிவதில் குறையாக உள்ளது. இதனால் மக்களுக்குச் சந்தையை விட மிகக் குறைவான விலையில் முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

"திருட்டினை தடுக்க வீட்டினை பூட்டிவைப்பது போல, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முகக்கவசம் அணியவேண்டும்," என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். தடுப்பூசி செலுத்திக் கொள்வது மற்றும் முகக்கவசம் அணிவது குறித்து மக்களிடையே பெரியளவில் விழிப்புணர்வை இளைஞர் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த மலிவு விலை முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் புதுச்சேரியில் உள்ள 70 பொன்லைட் விற்பனை நிலையங்களில் கிடைக்கும். சுமார் நான்கு லட்ச முகக்கவசங்களை சுகாதார அமைச்சகம் வாங்கி மலிவு விலையில் விற்பனை செய்யவுள்ளனர்.


மேலும் மக்களைத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் கொள்ளவேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

source: https://www.thehindu.com/news/cities/puducherry/now-get-masks-for-1-at-ponlait-milk-outlets/article34380119.ece?utm_source=puducherry&utm_medium=sticky_footer

Similar News