கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகளவில் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை அடுத்து புதுச்சேரியில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகிற நிலையில், அந்த கட்டுப்பாடுகள் மே 10 வரை தொடரும் என்று புதுச்சேரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவில், இரவு நேர ஊரடங்கைத் தவிர, கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் கூடுவதற்கான கட்டுப்பாடுகளும் மே 10 வரை நீடிக்கிறது என்று வருவாய் செயலாளர் அசோக் குமார் தெரிவித்தார்.
அத்தியாவசிய கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள், பால் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்து வழிபாட்டுத் தளங்களும் பொது மக்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு அறிக்கையில், துணை ஆணையர் T சுதாகர், புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மே 10 வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
மேற்கூறிய கட்டுப்பாடுகளின் விதிகளை மீறுபவர்களின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்களின் மேல் புதுச்சேரி கலால் சட்டம் 1970 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
source: https://www.thehindu.com/news/cities/puducherry/puducherry-lockdown-restrictions-extended-till-may-10/article34476870.ece