புதுச்சேரியில் தற்பொழுது வாய்க்கால் தூர்வாரும் பணிகளுக்காக மாநில அரசு தற்போது நிதிகளை ஒதுக்கி இருக்கிறது. அபிஷேகப்பாக்கம் ஏரிக்கரையிலிருந்து ஆரம்பமாகும் மழைநீர் வடிகால் வாய்க்காலானது திருமலைவாசன் நகர், ராஜாராம் நகர், தவளக்குப்பம் தாமரைக்குளம், தானம்பாளையம் வழியாக பூரணாங்குப்பம் ஆற்றங்கரை செல்கிறது.
குறிப்பாக இந்த வாய்க்கால் சுமார் பத்து லட்சம் செலவில் தூர்வாரப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான பணிகளை மும்மரமாக அரசு செய்து வருகிறது. இந்த பணிகளை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார். தொடர்ந்து பூரணாங்குப்பம் ஆற்றுவாய்க்காலையும் தூர்வாரி சுத்தப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கவுன்சிலர்கள் போன்று பலரும் இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்க்கால் தூர்வாரப்படும் என்று ஒரு செய்தி மக்களின் மகிழ்ச்சிக்கு வித்தாக அமைந்து இருக்கிறது.
Input & Image courtesy: News