புதுச்சேரி : ஏப்ரல் 10 முதல் இரவு ஊரடங்கு விதிக்க உத்தரவு.!

Update: 2021-04-10 14:32 GMT

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ள நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஏப்ரல் ௧௦-ல் இருந்து புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு விதிக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.


தொற்றைக் கட்டுப்படுத்த வழிமுறைகளை வழங்கிய அவர், முககவசம் அணிவது கட்டாயம் என்று கூறி இதனை மீறுபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனிக்கிழமையில் இருந்து இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார். திரையரங்கங்களில் 50 சதவீத அனுமதி மற்றும் சமூக மற்றும் மதம் சார்ந்த இடங்களில் கூட்டங்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளது. மதம் சார்ந்த இடங்கள் இரவு 8 மணிக்கு மூட பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


அரசு 100 கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் தடுப்பூசி மையங்களை அமைக்கும் என்று அவர் தெரிவித்தார். உயர் அதிகாரிகள், வணிக மையங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட விழிப்புணர்வுடன் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில் புதுச்சேரியில் புதிதாகத் தொற்று பாதிப்பு 223 ஆக மற்றும் மொத்த தொற்று எண்ணிக்கை 43,465 ஆக உள்ளது.


source: https://www.india.com/puducherry/night-curfew-imposed-in-puducherry-from-april-10-to-control-spread-of-covid-19-4571521/

Similar News