புதுச்சேரி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 120ஐ தாண்டியது!

Update: 2021-03-18 05:16 GMT

புதுச்சேரியில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதன்கிழமை அன்று முன்னாள் முதலமைச்சரும் மற்றும் AINRC தலைவருமான N ரங்கசாமி வேட்புமனுவைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, பல தலைவர்களும் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கினர். இந்த வேட்புமனு தாக்கலில் 120 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.




 ரங்கசாமி ஏனாம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, AINRC யின் முன்னாள் அமைச்சர் N.G பன்னீர் செல்வம் மற்றும் ராஜவேலு போன்ற நெட்டப்பாக்கம் மற்றும் ஒழுகரை போன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். வில்லியனுர் தொகுதியில் S V சுகுமாரன் தொகுதியிலும், U லட்சுமிகாந்தன் எம்பலம் தொகுதியிலும், நெடுங்காடு தொகுதியில் சந்திர பிரியங்கா, அதிர்காமம் தொகுதியில் அப்பாதுரை, காரைக்கால் வடக்கு பகுதியில் திருமுருகன், அரியாங்குப்பம் தொகுதியில் தட்சிணாமூர்த்தி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

புதுச்சேரி PCC தலைவர் சுப்ரமணியன் காரைக்கால் வடக்கு பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் எம்பலம், நெடுங்காடு உள்ளிட்ட தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

ஒப்பலம் தொகுதியில் AIADMK வேட்பாளர் அன்பழகன் மற்றும் திமுக வேட்பாளர் அன்னிபால் கென்னடி ஆகியோரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். முதலியார்பேட்டையில் AIADMK பாஸ்கர் மற்றும் பஹூயூர் தொகுதியில் தனவேலு முதலியோர் வேட்புமனுவைப் பதிவு செய்தனர். மன்னடிப்பேட்டையில் பா.ஜ.க வேட்பாளர் நமசிவாயம் தாக்கல் செய்தார்.




 தட்டாஞ்சாவடியில் N ரங்கசாமியை எதிர்த்து CPI வேட்பாளர் சேது செல்வம் தாக்கல் செய்தார். மங்களம் தொகுதியில், திமுக வேட்பாளர் குமாரவேல் மற்றும் PMK உறுப்பினர் மதியழகன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

இவர்களை விடுத்து மக்கள் நீதிமையம் சார்பாக அரியாங்குப்பம் தொகுதியில் ருத்திரகுமரன், எம்பலம் தொகுதியில் சோமநாதன், உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ளனர். SDPI சார்பாக மொஹம்மத் தமீம் கனி காரைக்கால் வடக்கு தொகுதியிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

Similar News