புதுச்சேரியில் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

Update: 2021-06-08 07:45 GMT

புதுச்சேரியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஜூன் 7 நள்ளிரவு வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஜூன் 14 வரை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யூனியன் பிரதேசத்தில் இரவு 10 முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து வித மதுபான கடைகளையும் காலை 9 மணிமுதல் 5 மணிவரை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகின்ற வேளையில், தற்போது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 கீழ் சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி மாநில செயற்குழு தலைவர் தெரிவித்தார்.

"அனைத்து வித மதுபான கடைகளும் 8.06.2021 முதல் 14.06.2021 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மேலும் இந்த கடைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்," என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. மேலும் இதனை உன்னிப்பாகக் கவனிக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.  


கொரோனா தொற்று அச்சத்தை கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தும் பணியும் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

Similar News