அடுத்த 15 நாட்களில் ஆக்சிஜென் படுக்கை வசதிகளை மேம்படுத்தவுள்ளது புதுச்சேரி அரசாங்கம்!

Update: 2021-05-19 10:59 GMT

புதுச்சேரியில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள அடுத்த 15 நாட்களில் ஆக்சிஜென் படுக்கை வசதிகளை மேம்படுத்தப் புதுச்சேரி அரசாங்கம் போர்க்களத்தில் இறங்கிச் செயல்பட்டு வருகின்றது.


ஜூன் மாதத்தில் கூடுதலாக 1,250 படுக்கை வசதிகளுடன் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மற்றும் கல்லூரிகளில் 2,800 வரை உயர்த்த உள்ளதாகச் சுகாதார செயலாளர் Dr T அருண் தெரிவித்தார். இந்த வளர்ச்சியானது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் இறப்புகளைச் சமாளிக்க அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெண்டிலேட்டர் படுக்கைகள் எதுவும் காலியாக இல்லை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிலவற்றிலேயே ஆக்சிஜென் படுக்கை வசதிகள் உள்ளது. JIPMER, IGMCRI மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜென் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கை வசதிகள் நிரம்பின.

இதற்கிடையில், IGMCRI யில் ஆக்சிஜென் படுக்கைகள் 320 இருந்து 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அருண் தெரிவித்தார். புதுச்சேரியில் Inox ஆக்சிஜென் தொழிற்சாலையில் இருந்து தினசரி 40 மெட்ரிக் டன் ஆக்சிஜென் வழங்கப்படுகின்றது. JIPMER றிலும் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளது.


தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 100 முதல் 150 படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை மத்திய அரசாங்கத்திடம் இருந்து 420 ரெம்டேசிவிர் மருந்து, 2,500 கொரோனா பரிசோதனை கருவி மற்றும் 90 D வகை ஆக்சிஜென் சிலிண்டர் முதலியவற்றைப் புதுச்சேரி பெற்றுள்ளது.

source: https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/19/puducherryto-enhance-its-oxygen-bed-capacity-in-next-15-days-to-tackle-covid-2304577.html

Similar News