புதுச்சேரியில் வாரநாட்களில் மதியம் 2 மணி வரை மதுபான விற்பனைக்கு அனுமதி.!
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 30 வரை வார நாட்களில் மதுபானங்கள் விற்கும் அனைத்து கடைகள்,பார்கள் மற்றும் உணவகங்களை மதியம் 2 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் முழுமையாகக் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவிற்கான அறிக்கையானது வியாழக்கிழமை அன்று துணை ஆணையர் T சுதாகர் வெளியிட்டார். வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை மதுபானங்கள், அர்ராக் போன்ற கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுபான உரிமையாளர்கள் கொடுக்கப்பட்டுள்ள நேரங்களை கடைப்பிடித்து அதற்கேற்றார் போல வழிமுறைகளுக்கு இணங்க நடக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில் போக்குவரத்துக்கு துறையும் சில கட்டுப்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரிக்கு உள்ளே மற்றும் வெளிமாநிலங்களுக்குப் பேருந்து இயக்கப்படாது. இருப்பினும் புதுச்சேரியில் நகரத்திலும், கிராமங்களில் பேருந்துகள் இயங்கும்.
source: https://timesofindia.indiatimes.com/city/puducherry/puducherry-liquor-shops-and-bars-asked-to-close-at-2pm-on-five-days-this-month/articleshow/82195869.cms