பரபரப்பு.. புதுச்சேரியில் கருப்பு பூஞ்சையால் 20 பேர் பாதிப்பு..!

Update: 2021-05-22 06:18 GMT

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் புதிதாகப் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோயும் மக்களை அச்சத்தில் வைத்திருக்கிறது. மேலும் புதுச்சேரியில் தற்போது உருவெடுத்துள்ள கருப்பு பூஞ்சையால் இரண்டு அரசு ஊழியர்கள் உட்பட 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.


50 ஆக்சிஜென் கான்செண்ட்ரடோர்ஸை உலக சுகாதார மையத்திடம் இருந்து பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொற்று நோய் சட்டம் 1897 கீழ், கருப்பு பூஞ்சை ஒரு நோயாக விரைவில் அறிவிப்பை வெளியிடப் போவதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து மருத்துவமனைகளும் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் வரும் நோயாளிகள் குறித்து சுகாதாரத் துறைக்கு விரைவில் தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் அதிவேகத்தில் கருப்பு பூஞ்சை பரவி வருவதாகவும் மற்றும் நோயாளிகள் சொந்தமாக மருந்தினை எடுக்காமல் மருத்துவ மனையை அணுகுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் பத்திரிகையாளர் ஒரு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கொரோனா தொற்றில் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி உடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.


கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆர்வத்துடன் முன்வருவதாகவும் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார்.

Inputs from Livemint

Similar News