தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஓர் அங்கம்.. புதுச்சேரியில் இணைந்த புதிய பாடத்திட்டம்..

Update: 2023-08-09 04:12 GMT

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் தற்போது ஒரு புதிய பாடத்திட்டம் இணைந்து இருக்கிறது. இது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஓர் அங்கமாக, கர்நாடக இசையை அடிப்படை பாடத்திட்டமாக அறிமுகம் செய்துள்ளது. இசை என்பது தெய்வீகக் கலையாகும். இசையைக் கேட்பதன் மூலமும், கற்றுக் கொள்வதன் மூலமும் மாணவர்களின் மனஅழுத்தம் குறையும் என்பதோடு, நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என்ற நோக்கத்துடன் இப்பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


அதாவது இசையை கற்கும் மாணவர்கள் தங்கள் தங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளலாம் என்று ஒரு அடிப்படையில் தற்போது இந்த ஒரு பாடத்திட்டம் இணைக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் தங்களுக்குள் மறைந்திருக்கும் இசைத் திறமையைக் வெளிப் படுத்துவதற்கும், அதனை சிறந்தமுறையில் கற்றுக் கொள்வதற்கும் இது வழிவகுக்கும். இணைப் பேராசிரியரும் பயிற்சி பெற்ற கர்நாடக இசைக் கலைஞருமான முனைவர் வெங்கடேசன், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கிறார்.


தற்போது 14 மாணவர்கள் இந்தப்பாடத்திட்டத்தில் பதிவு செய்து, பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு பாடத்தின் கோட்பாட்டு அம்சங்கள் கற்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கை காரணமாக புதிய புதிய பாடங்கள் மாணவர்களின் மனநிலை ஏற்ப அவர்கள் கற்கும் விதமாக அமைந்து இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News