புதுச்சேரி: ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 26 வரை முழு ஊரடங்கு விதிக்க உத்தரவு!
புதுச்சேரியில் கொரோனா தொற்று எண்ணிக்கை பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பரவுதலைக் கட்டுக்குள் கொண்டுவர ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 26 வரை புதுச்சேரியில் முழு ஊரடங்கு விதிக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
"யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 23 இரவு 10 முதல் ஏப்ரல் 26 காலை ஐந்து மணி வரை கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது," என்று ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியிருந்தார்.
மற்ற நாட்களில் வணிக நிலையங்கள் செயல்பட மதியம் 2 மணிவரை அனுமதிக்கப்படுகின்றது. உணவகங்களில் இரண்டு மணிக்கு மேல் பார்சல் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருமணங்களில் ஏற்கனவே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தளங்களில் எந்தவித மத ஊர்வலம் மற்றும் திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வழிமுறைகளை கடைப்பிடித்து பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் கூடுதலாகப் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் மற்றும் கூடுதலாக கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்படும் .
மே 1 முதல் 18 வயது மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசியும் வழங்கப்படும். கடந்த பதினைந்து நாட்களில் புதுச்சேரியில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் மற்றும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது.
source: https://in.news.yahoo.com/four-day-total-lockdown-puducherry-171949352.html