திருமண உதவி தொகையாக 25 ஆயிரம்.. 800 பேருக்கு வழங்கிய புதுச்சேரி அரசு..

Update: 2023-08-20 05:17 GMT

புதுச்சேரியில் தற்போது திருமண உதவி தொகையாக ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. புதுவை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலக செய்திக்குறிப்பில் இது பற்றியான தகவல்கள் இடம் பெற்று இருக்கிறது. புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மணப்பெண்களுக்கு அரசு வழங்கும் திருமண உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் மணப்பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.


மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள மணப் பெண்ணின் திருமண உதவித்தொகையாக ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் 800 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அதாவது இந்த திருமண உதவித் தொகையானது 2 கோடியே இருக்கும் என்றும் அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.


வருகின்ற 22ஆம் தேதி முதல் அவரவர் வங்கி கணக்கில் இந்த தொகை நேரடியாக செலுத்தப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொகையானது தேதி வாரியாக 2022 வரை விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News