புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ரூ.29 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்..

Update: 2023-08-11 05:15 GMT

புதுச்சேரியில் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.29 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகளை கடந்த மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார். இதனிடையே இந்த மேம்பாட்டு பணிகளுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் காரணமாக பல்வேறு நபர்கள் பாதிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இதன் காரணமாக பஸ் நிலைய பகுதிகளில் கடை வைத்திருப்போர்கள் முதல் ஆட்டோ டிரைவர்கள் வரை என பல தரப்பு வரும் போராட்டம் நடத்தினார்கள்.


இதன் காரணமாக தற்காலிகமாக இந்த ஒரு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. தங்களது கோரிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தும் பேசினார்கள். அப்போது அவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதன் பெயரில் அவர்களுக்கு உரிய வகையில் வேறு ஒரு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது பஸ்நிலைய மேம்பாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளன.


பஸ்நிலைய மையப்பகுதியில் வணிக நிறுவனங்கள் வர உள்ளன. இதனை கட்டுவதற்கு வசதியாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதனுள் கடைகளின் கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் இடைஞ்சல் இல்லாமல் செல்ல பிளாட்பாரங்களும் இடிக்கப்பட்டு தாரளமாக வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News