இந்தியாவில் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய ஏவுகணை சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி இருக்கிறது. இந்தியா சரித்திர சாதனை படைத்ததாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக இஸ்ரோ இந்த ஒரு முயற்சிக்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் குவிந்துள்ளது. இந்த சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக புதுவை மாவட்டம் ஆரியங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட சிற்பத்துறை மாணவர்கள் சந்திராயன் மணல் சிற்பம் செய்து இருக்கிறார்கள். பல்கலைக்கூட உதவி பேராசிரியர்கள் மாமலைவாசகன், சேகர் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் இந்த ஒரு சாதனையை படைத்து இருக்கிறார்கள். பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் ஆகாஷ் குமார், ஷாலினி, ஹேமாவதி, சத்யா, லேகா, சுப்ரமணிய ஆகியோர் அடங்கிய குழு இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பல்கலைக்கழக வழக்கத்தில் சுமார் 15 அடி அகலம் மற்றும் 6 அடி உயரம் கொண்ட மலைக் கோயிலில் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திராயன் விண்கலம் நிலவில் இறங்கிய லேண்டர் ஆகியவை தத்துவமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்திய தேசியக் கொடியையும் வரையப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மணல் சிற்பத்தை பல்கலைக்கழக கூடத்தில் முதல்வர் அன்னபூர்ணா துறை தலைவர் பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News