புதுச்சேரியில் இதுவரை 42 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்!

Update: 2021-04-03 11:33 GMT

புதுச்சேரியில் ஏப்ரல் 6 இல் 30 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்காகப் பணப் பரிமாற்றத்தைத் தடுக்க வாகனங்களில் பலத்த சோதனை நடைபெறுகின்றது. பாதுகாப்புப் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளைச் செய்துவருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்லுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.


இதுவரை புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 42.12 கோடி மதிப்புள்ள கணக்கிடப்படாத பணம் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் நோடல் அதிகாரி S சிவகுமார் செய்தியாளர்களிடம் இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டார். அதில் 2.63 கோடி மதிப்புள்ள கணக்கிடப்படாத பணமும், 35 கோடி மதிப்புள்ள நகையும், 3 கோடி மதிப்புள்ள பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 47 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை 43 விதிமீறல் வழக்குகளும் மற்றும் எட்டு பிற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




இந்நிலையில் புதுச்சேரியில் ஏப்ரல் 6 இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதற்கு முன்னதாக 48 மணிநேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது தேர்தலை அமைதியான முறையில் நடத்த எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6 இல் நடைபெறும் தேர்தலுக்கு மே 2 இல் அதற்கான முடிவுகள் வெளிவர உள்ளன/

Similar News