புதுச்சேரியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தச் சிறப்பு முகாம்கள்!

Update: 2021-05-16 09:43 GMT

இந்தியாவில் அதி வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்தியாவில் பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நடைபெற்று வருகின்றது.

தற்போது புதுச்சேரியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகளை விரைவில் செலுத்தும் நோக்கில், சிறப்பு முகாம்களைச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடத்தி வருகின்றது. மே 14 யில் இருந்து முகாம்களை நடத்தி வருவதாகச் சுகாதார செயலாளர் T அருண் சனிக்கிழமை அன்று செய்தி அறிக்கையில் தெரிவித்தார்.


இந்த முகாம்கள் கதிர்காமிதுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில், இந்திரா காந்தி மருத்துவமனையில், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மற்றும் JIPMERயில் நடத்தப்படுகின்றது. மேலும் இந்த முகாம்களில் 45 வயதுக்கு மேலானவர்களுக்குத் தடுப்பூசிகளை உறுதி செய்வதற்கு ஆதார் அல்லது பிற ஆவணங்கள் சரிபார்க்கப் படுகின்றன.

ஆரம்பச் சுகாதார மையங்களிலும் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அருண் தெரிவித்தார். புதுச்சேரியில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தடுப்பூசி செலுத்தச் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன


மேலும் புதுச்சேரி லெப்டினென்ட் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தி வருகிறார்.

source: https://www.news18.com/amp/news/india/special-camps-set-up-to-inoculate-those-aged-above-45-in-puducherry-3741749.html

Similar News