இந்தியாவின் வேலையின்மை விகிதத்தில் 47 சதவீதத்தில் முதலிடத்தில் புதுச்சேரி!
இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம், ஜூன் மாதத்தில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வேலையின்மை விகிதம் அதிகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. வேலையின்மை விகிதம் அதிகம் புதுச்சேரியில் 47.1 சதவீதமாக உள்ளது. ஹரியானா, இரண்டாவது இடத்திலும், அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கோவா, ஹிமாச்சல் பிரதேசம், கேரளா உள்ளது.
தேசிய விகிதத்தை விட தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் குறைவாகவே உள்ளது. வேலையின்மை மற்றும் வேலையிழப்புக்குக் காரணம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்காகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதுச்சேரியில் 75.8 சதவீதமாக ஆக உயர்ந்த விகிதம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 47.1 சதவீதமாக ஆகக் குறைந்தது. "தேசிய விகிதம் 9 சதவீதமாக இருக்கையில், இந்த விகிதம் பதற்றத்தை உண்டாக்குகிறது. அரசியல் நிர்வாகிகளின் முன்முயற்சி இல்லாததே இதற்குக் காரணம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசாங்கம் தங்கள் பொது கொள்கைகளை மறுசீரமைக்க இதுவே அதிக நேரம்," என்று பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வின் துறைத் தலைவர் NK குமரேசன் ராஜா தெரிவித்தார்.
முக்கிய தொழில்துறைகளிலிருந்து பெரும் முதலீட்டை அழைக்கப் புதுச்சேரி அரசாங்கம் யூனியன் பிரதேசத்தை மின்சார உபரி மையமாக மாற்ற வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். "அரசாங்கம் துறைமுகங்களை அமைக்க மத்திய சாகர்மாலா திட்டத்தை மேற்கொள்ளவேண்டும்," என்று ராஜா கூறினார்.
"தற்போது வளர்ந்து வரும் சூழலில் கிராமப்புறங்களில் மக்கள் விவசாயத்தை விடுத்து நகர்ப்புற வாழ்வாதாரத்தை நோக்கிச் செல்கின்றனர். புதுச்சேரி முன்னர் பருத்தி வளரும் பிரந்தயமாக பல்வேறு ஜவுளி ஆலைகளைக் கொண்டிருந்தது. ஆனால் இப்பகுதி நகர்ப்புற ஒருங்கிணைப்பாளராக உள்ளது என்பது வருத்தமளிக்கிறது," என்று ராஜா குறிப்பிட்டார்.