புதுச்சேரி: ரூ.53.39 கோடியில் மீன்பிடி துறைமுக திட்டம்.. தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்..
புதுச்சேரியில் ரூ.53.39 கோடியில் மீன்பிடி துறைமுக திட்டம் உள்பட 3 உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய மீன் வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்திய அரசின், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மூலம் சாகர் பரிக்கரமா 9வது பயண திட்டம், PMMSY உள்ள கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்தல், மீனவர்களுடன் கலந்துரையாடல் மீனவர்களுக்கான மத்திய மாநில நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா தலைமையில் புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று முன்தினம் 5.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்,மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் L.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். புதுச்சேரி முதலமைச்சர் திரு.N.ரங்கசாமி ள் விழாவினை துவக்கிவைத்து தலைமையுரையாற்றி மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர். R.செல்வம் , உள்துறை அமைச்சர் A.நமச்சிவாயம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் K.லட்சுமிநாராயணன் , விவசாயத்துறை அமைச்சர் C.ஜெயக்குமார். குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், AK.சாய்.ஜே. சரவணன் குமார். சட்டமன்ற உறுப்பினர் ப.லட்சுமிகாந்தன், பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர், மீன்வளத்துறை இயக்குநர் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
Input & Image courtesy: News