புதுச்சேரி-நாகப்பட்டினம் ரூ.6,431 கோடி செலவில் 4 வழிச்சாலை.. பணிகள் தீவிரம்..
இந்தியாவின் மத்திய அரசு சாலைகளை முக்கியமானதாக கருதி ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கும், ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு செல்லும் நெடுஞ்சாலைகளை சீரமைத்து வருகிறது. குறிப்பாக அதிக அளவில் சாலைகள் கடந்த 9 ஆண்டுகளில் போடப்பட்டிருக்கிறது என்று ஒரு சர்வே. அந்த வகையில் மோடி தலைமையில் மத்திய அரசாங்கம் தற்போது புதுச்சேரியில் இருந்து தமிழக நாகப்பட்டினத்திற்கும் இடையே நெடுஞ்சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கி இருக்கிறது.
புதுச்சேரி, நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை ரூ.6,431 கோடி செலவில் 4 வழிச்சாலையாக அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாகூர்-கன்னியக் கோவில் சாலை இடையே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 3 ராட்சத கிரேன் மற்றும் லாரிகள் மூலம் கான்கிரீட் தடுப்புகள் எடுத்து வரப்பட்டு மேம்பாலத்தில் பொருத்தப்பட்டு பணிகள் விரைவாக தற்போது வரை நடந்து வருகிறது.
இதனால் பாகூர்-கன்னியக்கோவில் சாலையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் ஆபத்தை உணராமல் கார், மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். ஆனால் இத்தகைய பகுதிகளில் மிகவும் ஆபத்து நிறைந்து இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இத்தகைய பகுதிகளில் பயணிக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News