புதுச்சேரி: 9 கோடியில் புனரமைக்கப் பட இருக்கும் காவல்துறை தலைமை அலுவலகம்..
புதுச்சேரி கடற்கரை சாலை அருகே காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசாங்கத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. மேலும் புதுச்சேரி அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் அவர்கள் இந்த ஒரு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். இது பற்றி அவர் மேலும் கூறும் பொழுது தற்பொழுது புதுச்சேரியில் கடற்கரை சாலை அருகே அமைந்திருக்கும் காவல்துறை தலைமை அலுவலகம் மிகவும் பழமையான கட்டிடம் ஆகும்.
எனவே இதனை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த ஒரு கூட்டத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் காவல்துறை தலைமை அலுவலகத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகள் குறித்தும் காவல்துறையின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்தும் சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் ஒட்டுமொத்த ஆலோசனை இந்த ஒரு கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News